» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொசு ஒழிப்பு பணிகளுக்காக புதிய ஆன்ட்ராய்ட் செயலி : தமிழகத்தில் முதல்முறையாக தூததுக்குடியில் அறிமுகம்

வெள்ளி 26, அக்டோபர் 2018 5:43:17 PM (IST)



தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பணியாளர்களுக்காக Mosquito Mapper என்ற ஆன்ட்ராய்ட் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில், கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பணியாளர்கள் (DBC workers) 450 நபர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேற்படி பணியாளர்கள் சுழற்சி அடிப்படையில், ஒவ்வொரு வீட்டிற்கும் வாரத்திற்கு ஒருமுறை சென்று வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாவதற்கான காரணிகளை கண்டறியும் பணியினை மேற்க்கொள்வதுடன் காரணிகள் கண்டறியப்படின் அதனை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கையினை மேற்க் கொண்டு தூத்துக்குடி மாநகராட்சி பொது சுகாதார பிரிவிற்கு அறிக்கை செய்யும் பணியினை செய்து வருகின்றனர். அவ்வாறு வீடுகளுக்கு செல்லும் நிலையில் கட்டிடங்கள் பூட்டப் பட்டடிருந்தால் அடுத்த நாள் மீண்டும் சென்று கள ஆய்வு மேற் கொள்வர்.

இந்நிலையில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பணியாளர்களின் பணியினை கண்காணிக்கும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சியால் QR Code மூலம் ஆன்ட்ராய்டு அலை பேசியில் Mosquito Mapper என்றும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சியின் அனைத்து வீடுகளின் சுவர்களிலும் QR Code ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்படும். DBC Workers Android செல்போனில் QR Code மற்றும் செயலியை கொண்டு வீடுகளுக்கு செல்லும் போது டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோர் விபரம், பாதிப்புக்குள்ளான குடியிருப்பு விபரங்கள் ஆகியவை கண்டறியப்படும் வகையில் மேற்படி செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் கூகுள் வரைபடத்தில் கொசுப்புழு உற்பத்தி அதிகமாக இருக்கும் இடங்கள், பாதிக்கப்பட்ட நபர், நோய் பாதிக்கப்பட்டவர் இருப்பிடம் போன்ற விபரங்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு முற்றிலும் அழிப்பதற்க்கும் மற்றும் பணியாளர்கள் முறையாக வீடுகளுக்குச் செல்வதை மாநகராட்சி உயர் அலுவலர்களால் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நோய் பரவுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கை புள்ளிவிபரங்களை QR Code மூலம் தமிழ் நாட்டில் முதலாவதாக தூத்துக்குடி மாநகராட்சியில் மேற்படி செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி செயலியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் துவக்கி வைத்தார். மேற்படி நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி), மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் திட்ட அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals

Joseph Marketing

New Shape Tailors

CSC Computer Education



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory