» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழைநீர் பிரச்சனை: பொதுமக்கள் சாலை மறியல் - தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 26, அக்டோபர் 2018 10:31:28 AM (IST)

தூத்துக்குடியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 18வது பகுதிக்குட்பட்ட லூர்தம்மாள்புரம், ஜீவா நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கழிவு நீரும் மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனைக் கண்டித்து இன்று தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட வராத மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மேலும் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷண் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை அப்புறப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் விடியோ பதிவு செய்ய நடவடிக்கை - ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:39:53 AM (IST)

ஆத்தூரில் 200 ஆண்டுகள் பழைமையான அரசமரத்தை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:06:37 AM (IST)

தெப்பக்குளத்தில் குதித்து முதியவர் தற்கொலை
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:02:53 AM (IST)

எரிவாயு குழாய் பதிக்கும் ஆய்வுக்கு மக்கள் எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்!
வெள்ளி 13, டிசம்பர் 2019 7:51:50 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 730 பேர் மனு தாக்கல்: உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பு
வெள்ளி 13, டிசம்பர் 2019 7:45:46 AM (IST)

அன்னம்மாள் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
வியாழன் 12, டிசம்பர் 2019 8:14:28 PM (IST)
