» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

வியாழன் 25, அக்டோபர் 2018 7:16:40 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்.25) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழையால் வி.இ. சாலை, உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரும், கழிவு நீரும் தெருவைச் சூழ்ந்துள்ளன. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். 

மின்கம்பங்கள் அருகே நீர் தேங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வீட்டிற்குள் கழிவுநீருடன் சேர்ந்து மழைவெள்ளம் புகுந்ததால், பொதுமக்கள் மாணவமாணவிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.  இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்.25) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing

New Shape Tailors



Thoothukudi Business Directory