» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வியாழன் 18, அக்டோபர் 2018 8:33:12 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ஏரலில் மதியம் 1.45 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1¼ மணி நேரம் நீடித்த மழையால் ஏரல் மெயின் பஜார், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகநேரி, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளிலும் மதியம் பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடியில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென மழைபெய்தது. சுமார் 1 மணி நேரம் வரை மழை நீடித்தது. தென்திருப்பேரை–குரங்கணி ரோட்டில் மாந்தோப்பில் நின்ற 2 மாமரங்களின் கிளைகள் முறிந்து, சாலையில் விழுந்தன. அப்போது அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதேபோன்று ஏரல்–மங்களகுறிச்சி ரோட்டில் சாலையோரம் நின்ற பட்டுப்போன தேக்கு மரம் பலத்த மழையில் வேரோடு சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

New Shape Tailors


CSC Computer Education

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsThoothukudi Business Directory