» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

புதன் 17, அக்டோபர் 2018 8:29:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிக்கு செல்லும் மகளிர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பழங்குடியின மகளிர் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 2017-2018-க்கு மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் மானியத்தினை உயர்த்தி அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

நாளதுவரை விண்ணப்பம் செய்யாத பணிக்கு செல்லும் மகளிர் மாற்றுத் திறனாளிகள், பழங்குடியின மகளிர் தங்கள் பகுதியிலுள்ள மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரக மகளிர் திட்ட அலுவலகத்தில், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிட உடன் விண்ணப்பம் செய்யலாம்.  

இத்திட்டத்தின் மூலம் இருசக்கர வாகனம் பெறும் மகளிர் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு அதிகபட்சமாக மானியமாக ரூ.31,250 ம், பழங்குடியின மகளிருக்கு அதிகபட்ச மானியமாக ரூ.25,000 ம் உடன் வழங்கப்படும்.  மேலும் விபரங்களை அறிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முகவரியான, திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,மகளிர் திட்டம், 2வது தளம், மாவட்ட ஆட்சியரகம், கோரம்பள்ளம் - 628 101.தூத்துக்குடி மாவட்டம்.தொலைபேசி எண் : 0461 - 2341282 என்ற முகவரியில் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD


CSC Computer Education

crescentopticals

New Shape Tailors
Thoothukudi Business Directory