» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நூறு அடி உயர டவரில் ஏறி வாலிபர் போராட்டம்: கோவில்பட்டியில் பரபரப்பு

வெள்ளி 12, அக்டோபர் 2018 12:28:18 PM (IST)



கோவில்பட்டியில் காவல்துறைக்குச் சொந்தமான டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம, கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு திட்டங்குளத்தினை சேர்ந்தவர் சரவணன் மகன் ஜோதிரமேஷ்(25). கூலி தொழில் செய்து வருகிறார். இவர் இன்று காலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான 100 அடி உயரமுள்ள வயர்லெஸ் டவரில் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னுடைய பள்ளி சான்றிதழ் காணவில்லை என்றும், அதனை மீட்டும் தரவேண்டும் என்றும், அதுவரை கீழே இறங்க போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவம், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை இறங்க வைத்தனர். 

பின்னர் அவரை போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிரமேஷ் மீது வழிப்பறி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் டவரில் ஏறி போராட்டம் நடத்துவது இது 3வது முறை என்பது குறிப்பிடதக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையினர் தன்னை துன்புறுத்துவதாக கூறி சுபா நகரில் உள்ள தனியார் செல்போன் டவரில் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது மனைவியுடன் தன்னை சேர்த்த வைக்க கோரி தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறை வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory