» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்­துக்­கு­டியில் தூய்மை பணி வாகனங்களை ஆளுநர் தொடங்கி வைத்தார்: வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

வெள்ளி 12, அக்டோபர் 2018 11:59:13 AM (IST)துாத்­துக்­கு­டியில்  தூய்மை பணிகளுக்காக ரூ.91.80 இலட்சம் மதிப்பில் புதியதாக வாங்கப்பட்ட 17 குப்பை சேகரிக்கும் நவீன வாகனங்களை தமிழக ஆளுநர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

தமி­ழக ஆளுநர் பன்வா­ரி­வால் புரோ­ஹித் துாத்­துக்­கு­டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையொட்டி இன்று காலை நெல்­லை­யில் இருந்து புறப்பட்ட ஆளுநர் துாத்­துக்­குடி பழைய மாந­க­ராட்சி அலு­வ­ல­கம் அருகே உள்ள அரசு சுற்­றுலா மாளிகைக்கு வந்தார். அங்கு ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர், அங்­கி­ருந்து விஇ ரோடு புதுக்கிராமம் வழி­யாக சிவந்­தா­கு­ளம் மாந­க­ராட்சி நடு­நி­லைப்­ பள்­ளிக்கு வந்தார்.அங்கு நடைபெற்ற விழாவில் தூய்மை பாரதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில், பிளாஸ்­டிக் ஒழிப்பை ஒட்டி பள்ளி மாணவ, மாண­வி­கள் பிஸ்­கட், சாக்­லேட் கவர் போன்­ற­வற்றை பள்ளி வளா­கத்­தில் ஒரு இடத்­தில் சேக­ரித்து வைத்து அந்த கவரை அந்த கம்­பெ­னிக்கு மாணவ, மாண­வி­கள் அனுப்பி வைக்­கும் பணியை ஆளுநர் பன்வா­ரி­வால் புரோ­ஹித்துவக்கி வைத்தார்.  பின்னர், ரூ.91.80 இலட்சம் மதிப்பில் புதியதாக வாங்கப்பட்ட 17 குப்பை சேகரிக்கும் நவீன வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி வளா­கத்­தில் நடைபெற்ற விழா­வில் ஆளுநர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எற்றனர். 

பின்னர் மாணவ, மாணவிகளிடம் பேசிய ஆளுநர், "வீட்டை தூய்மையாக வைக்க தாய், தந்தை, மற்றும் குடும்பத்தினரை மாணவர்கள் அறிவுறுத்த வேண்டும்" என்றார். பின்னர் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் சத்துணவு மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறதா? என அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், குழந்தைகளிடமும் கலந்துரையாடினார். பின்னர் ஆளுநர் புதுக்­கி­ரா­மம் ரோடு வழி­யாக துாத்­துக்­குடி பழைய பஸ் பேருந்து நிலையத்திற்கு சென்று, தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர், பொதுமக்களிடம் சகஜமாக கலந்துரையாடினார். பின்னர், அங்கிருந்து மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு சென்ற ஆளுநர், மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநரின் செயலாளர் ராஜகோபால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்பி முரளி ரம்பா, மாநராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். துாத்­துக்­கு­டி­யில் ஆளுநர் வருகையை முன்னிட்டு, போலீஸ் ரோந்து மற்­றும் பலத்த பாது­காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிOct 12, 2018 - 01:02:59 PM | Posted IP 141.1*****

1.80 கோடியில் 18 வாகனங்களா. அப்போ ஒரு வண்டி 10 லட்சமா? இது எந்த ஊரு கணக்கு ன்னு தெரியலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory