» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரயில் மோதி குலசை பெண் பக்தர் சாவு

வெள்ளி 12, அக்டோபர் 2018 10:46:39 AM (IST)

தூத்துக்குடியில் ரயில் மோதி குலசை பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் இருந்து நேற்று மாலை தூத்துக்குடி நோக்கி புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7.15 மணியளவில் தூத்துக்குடி 3வது மற்றும் 4வது ரயில்வே கேட் இடையே வந்தபோது அப்பகுதியில் இருந்த சிறிய பாலத்தில் நடந்து சென்ற சுமார் 60வயது மதிக்கத்தக்க மூதாட்டி மீது மோதியது, இதில் அந்தபெண் ரயிலில் சிக்கி உயிரிழந்தார். 

மேலும், அவரது உடலை சுமார் 5கிமீதூரம் ரயில் இழுத்துச் சென்றதில், அந்த பெண்ணின் உடல் சிதைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் மோதி உயிரிழந்த பெண் யார் என்பது தெரியவில்லை. குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்காக காப்பு கட்டி, அதற்கான உடை அணிந்திருந்தார். விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing



Thoothukudi Business Directory