» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ.10 லட்சம் வரை மானியம்: ஆட்சியர் தகவல்

வியாழன் 11, அக்டோபர் 2018 6:00:19 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் விளை பொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைப்பதற்காக ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில்  நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் நிதியாண்டில் விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி, அதிக இலாபம் பெறும் வகையில், மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் 75 சதவிகித மானியத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் மானாவாரி தொகுப்புகளிலுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அந்தந்த தொகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்காக, மதிப்பு கூட்டும் இயந்திர மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. விளைபொருட்களை சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல் விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்டப் பல்வேறு பணிகளுக்கான மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் பணி மூலதனத்திற்கான மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படுகிறது. 

மீதமுள்ள 25 சதவீதத் தொகை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக்குழுவின் பங்களிப்பாக செலுத்தப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுப்பிலுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு சேர்ந்து பெரிய அளவிலான மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் ரூ.10 இலட்சத்திற்கும் அதிகமான தொகையிலும் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மதிப்புக் கூட்டு இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறையின் மூலம் விலை நிர்ணயம் செய்து அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படவேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கத்தாகுறிச்சி, ஒட்டநத்தம், வெங்கடாசலபுரம் ஆகிய இடங்களில் மதிப்புக்கூட்டு இயந்திர மையம் அமைக்கப்பட்டு, பல்வகை எண்ணை பிழிந்தெடுக்கும் கருவிகள், உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நடப்பு நிதியாண்டிலும் இரண்டாவது கட்டமாக தமிழக அளவில் 150 மதிப்புக்கூட்டு இயந்திர மையங்களை அமைக்க அனுமதித்துள்ளது. நமது மாவட்டத்தில் 13 மதிப்புக்கூட்டு இயந்திர மையங்கள் தலா ரூ.10 இலட்சம் மானியத்தில் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த குPழு/குPபு (உழவர் உற்பத்தியாளர் அமைப்பு / உழவர் உற்பத்தியாளர் குழு) மூலம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.

விண்ணப்பிக்கும் விபரங்களை வேளாண்மை பொறியியல்துறை, செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், வேளாண்மை, இணை இயக்குநர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். எனவே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிற்கு அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Joseph Marketing

New Shape TailorscrescentopticalsThoothukudi Business Directory