» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுமக்கள் சேமித்து வைக்கும் தண்ணீரில் புழுக்கள் இருந்தால் அபாராதம்: ஆணையர் எச்சரிக்கை

வியாழன் 11, அக்டோபர் 2018 5:47:25 PM (IST)

பொதுமக்கள் சேமித்து வைக்கும் தண்ணீரில் புழுக்கள் இருந்தால் அபாராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் நோய்தடுப்பு முறைகளை கையாளும் விதமாக, பொது மக்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் கொசு மற்றும் புழுக்களை அழித்திடும் வகையில் நாள்தோறும் புழுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை கண்டறிவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, மேலும் வீடுகள் தோறும் சுழற்ச்சி முறையில் 7 தினங்களுக்கு ஒரு முறை டெங்கு உற்பத்தி தடுக்கும் பணியாளர்கள் (DBC Workers) மூலம் ஆய்வு மேற்க்கொண்டு டெங்கு உற்பத்தியாகும் காரணிகள் கண்டறியப்படின்; உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அபேட், Liquid chlorine ஆகியவை தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொசுக்களை அழித்திடும் வகையில் மாநகரப் பகுதிகளில் புகை மருந்தும் அடிக்கப்பட்டு வருவதுடன் பொதுமக்களை தாக்கக்கூடிய நோய்கள் குறித்தும் நாள்தோறும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 11.10.2018 அன்று சிதம்பர நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் தலைமையில் ஆய்வு செய்த போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. 

மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி மாநகராட்சி மூலம் மேற்படி கட்டிடத்திற்கு ரூ.25,000- அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் சிதம்பர நகர் மெயின் சாலையில் அமைந்துள்ள தேநீர் கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியிலும் புழுக்கள் காணப்பட்டதால் மேற்படி கடைக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் உபயோகப்படுத்தும் இடங்களை தூய்மையாக வைத்திருப்பதுடன் சேமித்து வைக்கும் தண்ணீரில் புழுக்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்வதோடு இதுபோன்ற அபராதங்களை தவிர்த்திடுமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் டாக்டர். ஆல்பி ஜான் வர்க்கீஸ்  தெரிவித்தார்.


மக்கள் கருத்து

வடிவேல்Oct 12, 2018 - 03:14:41 PM | Posted IP 162.1*****

முதல்ல நீங்க விடுற தண்ணீர்லயே புழுவோடு தான் வருது.

NAGARAJOct 11, 2018 - 11:49:12 PM | Posted IP 172.6*****

ஐயா மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் உள்ள இடத்தில் அடிப்படை வசதியான கழிவுநீர் வாய்க்கால் மற்றும் குடியிருப்பதற்க்கே உதவாத இடத்தில் குடியிருக்கும் ஏழ்மையான மக்களுக்கு முதலில் நல்ல ஒரு குடியிருப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான தண்ணீர் தினமும் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு அபாரதம் போடுவதை பற்றி சட்டம் போடுங்கள்.

காதர்Oct 11, 2018 - 06:58:56 PM | Posted IP 172.6*****

ரோடு போடுற ஐடியா ஏதும் இருக்கா....?

geethaOct 11, 2018 - 06:27:16 PM | Posted IP 141.1*****

முதல்ல நல்ல தண்ணி விடுங்க டா நல்ல ரோடு போடுங்க அப்புறம் பைன் போடலாம் வான்டங்க

ராஜ்Oct 11, 2018 - 06:25:39 PM | Posted IP 172.6*****

முதல் ல சேமிச்சு வைக்க நிறைய இடத்துல தண்ணி இல்லை அதுக்கு யாருக்கு அபராதம் போடுறது

ஆப்Oct 11, 2018 - 05:55:33 PM | Posted IP 172.6*****

தினம் தினம் சில மாற்றங்களை காண்கிறோம் .மகிழ்ச்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications

Nalam PasumaiyagamThoothukudi Business Directory