» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலை மூடியும் காற்று மாசு அதிகரிப்பு : மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

புதன் 10, அக்டோபர் 2018 7:02:37 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில சுற்றுச் சூழல் பாதிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கணேசன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருந்தார். அதில் ஸ்டெர்லைட் ஆலையில் மூடிய பின்னர் காற்றில் சல்பர் டை ஆக்ஸைடு எவ்வளவு குறைந்துள்ளது? என்ற விளக்கத்தை கோரியிருந்தார். அதே போன்று சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளதற்கு ஸ்டெர்லைட் மட்டும்தான் காரணமா? என்று விவரமும் கேட்டிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு அண்மையில் பொதுத் தகவல் அலுவலர் பதில் அனுப்பியுள்ளார். அந்த பதிவில் மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை. மாறாக, 2018 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்கள் தூத்துக்குடி நகரில் சிப்காட் வளாகம், ஏவிஎம் ஜூவல்லர்ஸ், மற்றும் ராஜா ஏஜென்சிஸ் ஆகிய 3 மையங்களில் இருந்து பரிசோதிக்கப்பட்ட காற்றின் என்ஏஎம்பி (NAMP) ஆய்வு அறிக்கை நகலை அனுப்பியுள்ளார்கள். மேற்கண்ட 3 மையங்களிலும் மாதந்தோறும் இடையிடையே பல நாட்கள், பல மணி நேரம் மேற்கொண்ட சோதனையில் SO2, NOX, NH3, RSPM முதலான வாயுக்களின் அளவுவும், மாதம்தோறும் சராசரி அளவும் தரப்பட்டுள்ளது.
ஜனவரி 18 முதல் ஆகஸ்ட் 18 வரை எட்டு மாதங்கள் மேற்கண்ட மாத சராசரி காற்று ஆய்வு அறிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலை மே 18 ம் தேதி மூடப்பட்ட பின்னர் கடத்தப்பட்ட NAMP காற்று ஆய்வில் எந்த மாற்றமும் இல்லை. SO2 அளவில் குறைவு ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் SO2 அளவு ஜூன், ஜூலை மாதங்களில் சற்று கூடுதலாகவே உள்ளது.


மக்கள் கருத்து

அருண்Oct 12, 2018 - 05:14:59 PM | Posted IP 172.6*****

ஆகுஸ்ட் , செப்டம்பர் ரிசல்ட் காணும்???

வ. உ. சி.Oct 12, 2018 - 04:13:06 PM | Posted IP 162.1*****

நன்றி. அதற்காக sterlite ஒன்னும் நல்லது கிடையாது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Boopal s.Oct 12, 2018 - 11:52:24 AM | Posted IP 172.6*****

Thanks for real RTI given by TNPCB thro Ganesan Sir.

சந்துருOct 12, 2018 - 11:28:32 AM | Posted IP 141.1*****

போதுமான பாதுகாப்பு வசதிகளோடு - மைய மற்றும் மாநில அரசுகளின் கண்காணிப்போடு - ஆலை மீண்டும் திறக்கப்படவேண்டும் - இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு இல்லை

GanapathyOct 12, 2018 - 10:27:05 AM | Posted IP 162.1*****

We welcome the authanticated report ofTnpcb.people should go by sientific report not by hear say.It is not good for growth of a nation.

ராஜாOct 11, 2018 - 02:22:57 PM | Posted IP 162.1*****

கடந்த 10 ஆண்டு டூ ட்டியில் செய்தி வாசிக்கிறேன். எல்லா தரப்பு செய்திகளும் பார்க்க முடிகிறது. நன்றி.

மாணவன்Oct 11, 2018 - 01:55:47 PM | Posted IP 172.6*****

அறிவில்லா தமிழனே.. நீ விழித்து கொள்வது எப்போது?

SarathOct 11, 2018 - 01:35:46 PM | Posted IP 172.6*****

இனிமே tutyonline நியூஸ்சயும் மட்டம் தட்டுவானுங்க, உண்மைய பேச விடமாட்டாங்லே😔. However thanks to tutyonline for open up the truth

தூத்துகுடிகாரன்Oct 11, 2018 - 01:29:05 PM | Posted IP 162.1*****

யாருக்குப்பா தெரியும் எது உண்மைன்னு சும்மா டேபிள் போடு நான் கூடத்தான் சொல்லுவேன், அப்டியே எல்லாம் உத்தம புத்திரனுங்க.

GomathiOct 11, 2018 - 11:38:21 AM | Posted IP 141.1*****

Thanks for informing the fact.

ராஜ்Oct 11, 2018 - 10:55:02 AM | Posted IP 162.1*****

கூல் இனிமே எல்லா நியூஸ் ம் தினத்தந்தி லேயே படிச்சிக்கிறோம்

M RamasamyOct 11, 2018 - 10:01:35 AM | Posted IP 141.1*****

Very shocking news that it is operating. Pollution control board is working slightly to favour major industry....valga

முகம்மது ஹனிபாOct 11, 2018 - 09:47:20 AM | Posted IP 162.1*****

உண்மைகளை ஆராயாமல் காலத்தை ஓட்டும் நம் மக்கள் இதைப் போன்ற எத்தனை ஆதாரங்கள் தந்தாலும் விழிப்புற மாட்டார்கள்.

நண்பன்Oct 11, 2018 - 09:33:44 AM | Posted IP 141.1*****

பெட்டி பலம் தான்

தமிழன்Oct 11, 2018 - 06:06:22 AM | Posted IP 172.6*****

திட்டமிட்டு SPIC & TAC நிறுவனங்களால் அதிக அளவில் விட படுகிறது

சிவராம்Oct 10, 2018 - 11:19:50 PM | Posted IP 162.1*****

உன்மையை உரக்க சொன்ன மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், கணேசன் ஐயாவுக்கும் நன்றி!

கணேஷ்Oct 10, 2018 - 11:17:48 PM | Posted IP 172.6*****

டூட்டி ஆன்லைன் பெட்டி பலமா?

rajesOct 10, 2018 - 08:51:31 PM | Posted IP 172.6*****

Ippoluthavathu makkal purindhukolla vendum Poiyana தகவல்களை nambamal nalla visaranai seithu pinbu therindhukollungal

S SubbiahOct 10, 2018 - 08:40:16 PM | Posted IP 162.1*****

First time true news conveyed

போராளிOct 10, 2018 - 07:30:46 PM | Posted IP 162.1*****

தூய்மையான காற்று எங்கள் உரிமைனு போராடின போராளிகள் மேடைக்கு வரவும்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes

CSC Computer EducationNew Shape Tailors
Thoothukudi Business Directory