» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!!

புதன் 10, அக்டோபர் 2018 12:09:43 PM (IST)

நெல்லையில் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில ஈடுபட்டனர். 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்தும், தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரியும் போராடிய மாணவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தக் கண்டித்து தூத்துக்குடியில் வஉசி கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதில், எஸ்எப்ஐ மாவட்ட தலைவர் ஜாய்சன் தலைமையில் 100 மாணவிகள் உட்பட 200பேர் கலந்து கொண்டனர்.

இதுபோல் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள காமராஜ் கல்லூரியில் எஸ்எப்ஐ மாவட்ட செயலளார் சுரேஷ் தலைமையில் 40மாணவிகள் உட்பட 100 பேர், கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தென்பாகம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 


மக்கள் கருத்து

தமிழன்Oct 10, 2018 - 12:22:50 PM | Posted IP 162.1*****

மாணவர்களை ஆக்கபூர்வமான வழியில் போராட சொல்லாமல் தொடர்ந்து அவர்களை வன்முறை பாதைக்கு அழைத்துச்செல்லும் கம்யூனிச மாணவர் இயக்கம் SFi யை மாணவர்கள் இனம்கண்டு புறக்கணிக்கவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals

New Shape Tailors




Thoothukudi Business Directory