» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அம்மன் கோவில்களில் தசரா திருவிழா: 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
சனி 6, அக்டோபர் 2018 4:09:46 PM (IST)
தூத்துக்குடியில் 25 கோவில்களில் தசரா திருவிழா வருகிற 9ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
தூத்துக்குடியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்டும் தசரா திருவிழா இந்த ஆண்டு வருகிற அக்.8ம் தேதி இரவு தூத்துக்குடியில் உள்ள வடபாகம் சந்தன மாரியம்மன் கோவில், மட்டக்கடை உச்சினிமாகாளி அம்மன் கோவில், தெப்பங்குளம் ஸ்ரீமாரியம்மன் கோவில், கீழ சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில், அண்ணா நகர் பத்திரகாளியம்மன் கோவில் உட்பட 25 கோவில்களில் மாக்காப்பு தீபாரதனையுடன் தசரா திருவிழா தொடங்குகிறது.
அக். 9ம் தேதி இரவு 7 மணிக்கு அனைத்து கோவில்களிலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொடி ஏற்றப்பட்டு தூத்துக்குடி நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். 10ம் தேதி காலை 5 மணிக்கு அனைத்து கோவில்களிலும் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்குகிறது. தினசரி மாலையில் அனைத்து கோவில்களிலும் ஒவ்வொரு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அன்னை காட்சியளிப்பார். இரவு 8 மணிக்கு கோவில்களில் கொலுவில் அன்னைக்கு சிறப்பு அலங்காரம் - தீபாராதனைகள் நடைபெறும். 7ம் திருவிழாவான 16ம் தேதி இரவு 7மணிக்கு மகிஷாசூர ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தசரா திருவிழாவில் 10ம் நாள் திருவிழாவான 19ம் தேதி இரவு 7 மணிக்கு அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மகிஷாசூரனின் 7 தலைகள் வெட்டப்பட்டு கடைசி தலையான மாட்டு தலை வெட்டப்பட்டு அம்பாளின் பாதத்தில் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதன் பின் இரவு அனைத்து கோவில்களிலும் அம்பாளுக்கு படைப்பு பூஜை படைத்து தீபாராதனை நடைபெறுகிறது. 20ம் தேதி அதிகாலை அம்பாள் சப்பரத்தில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
21ம் தேதி அனைத்து சப்பரங்களும் தபசு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சிவன் கோவில் முன்பு வந்தடையும். அங்கு சங்கரராமேஸ்வரர், அன்னை பாகம்பிரியாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். ஒவ்வோரு கோவிலிலிருந்து வரும் சப்பரத்திற்கு எதிர்சேவை தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்பு அனைத்து சப்பரங்களும் அந்தந்த கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும். சப்பரத்திற்கு முன்பு மாவிளக்கு, முளப்பாரி, ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
மக்கள் கருத்து
maniOct 6, 2018 - 05:46:45 PM | Posted IP 162.1*****
நரகாசூரன் அல்ல.......மகிக்ஷாசூரன்......
நாலுமாவடி செய்திகளை சரியாக பதிவிடும் tutyonline kkuநன்றி.
மேலும் தொடரும் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன் விபத்து: பெண் பலி.. 10பேர் படுகாயம் - திருப்புத்தூர் அருகே சோகம்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:39:07 AM (IST)

தமிழன்Oct 7, 2018 - 01:34:57 PM | Posted IP 172.6*****