» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை: இடி தாக்கியதில் தேவாலய சிலுவை விழுந்தது!!
புதன் 3, அக்டோபர் 2018 5:51:26 PM (IST)

திருச்செந்தூர் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இடி தாக்கி அமலிநகர் அமலி அன்னை ஆலய கொடிமரத்தில் உள்ள சிலுவை கீழே விழுந்தது.
திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணியிலிருந்து கனமழை பெய்தது. இடி மின்னலுன் பயங்கர சத்தத்துடன் மழை கொட்டியது. இந்த மழையால் ரோடுகளில் மழை நீர் வெள்ள பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்ற மாணவ, மாணவிகள் மழையில் சிக்கி கொண்டனர். தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குடை பிடித்து சென்றாலும் முழுமையாக நனைத்தபடி சென்றனர்.
இடைவிடாது பெய்த மழையால் திருச்செந்தூர் டி.பி.ரோடு, காமராஜர் சாலை, பஸ் ஸ்டாண்ட், வடக்கு ரதவீதி, கீழரத வீதிகளில் ரோட்டில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. மாட்டுதாவணியில் உள்ள காந்தி தினசரி காய்கறி மார்க்கெட் முழுயாக மழை வெள்ளத்தில் தத்தளித்தது. காய்கறி மார்க்கெட்டிற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். மேலும் மழைநீர் குளம் போல் தேங்கியது. கொட்டி தீர்த்த கனமழையில் திருச்செந்தூர் சிவன்கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. அப்பகுதியில் உள்ள பந்தல்மண்டபத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. அமலிநகரில் உள்ள அமலி அன்னை ஆலயத்தின் முன்பில் உள்ள கொடிமரத்தில் உள்ள சிலுவை மீது இடி தாக்கியதில் கிழே விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பலருக்கு வேதனையை ஏற்படுத்தியது.

இன்று மாலை 3 மணி நிலவரபடி திருச்செந்தூரில் 92.2.மி.மீ.., குலசேகரன் பட்டணத்தில் 17 மி.மீ., காயல்பட்டணத்தில் 34 மி.மீ., மழையளவு பதிவானது. நீண்ட நாட்களாக பிறகு திருச்செந்தூர்ர், கீழநாலுமூலைகிணறு, பரமன்குறிச்சி, தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மழை காரணமாக சில இடங்களில் மின்தடை ஏற்பட்டு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. கீழே நாலுமூலைகிணறு, நாலுமூலைகிணறு, தளவாய்புரம், காயாமொழி உள்ளிட்ட பகுதிகளில் மாலை வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இப்பகுதிகளில் பல நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன் விபத்து: பெண் பலி.. 10பேர் படுகாயம் - திருப்புத்தூர் அருகே சோகம்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:39:07 AM (IST)
