» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணி நில விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
புதன் 3, அக்டோபர் 2018 3:57:27 PM (IST)
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப பெற்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக ஒதுக்கிய நிலத்தை அரசு திரும்பப் பெறப்பட்டதாக சிப்காட் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை பொதுமேலாளர் பொதுமேலாளர் சத்தியப்பிரியா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் 2வது அலகுக்காக 342ஏக்கர் நிலத்தை 99ஆண்டுக் குத்தகைக்குப் பெற்று சிப்காட்டுடன் உடன்பாடு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலம் 2005, 2006, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டு அதற்கான பணத்தையும் சிப்காட்டுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிப்காட் மேலாளர் கடந்த மே 29ஆம் தேதி குத்தகையை ரத்து செய்துள்ளதைக் குறிப்பிட்டு, குத்தகையை ரத்து செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். குத்தகையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர், எந்த முன்னறிவிப்பும் இன்றிக் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மக்களின் மிகப்பெரிய போராட்டத்தையடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், இது அரசின் முடிவு என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக எல்லா ஆலைகளையும் மூட முடியுமா என நீதிபதி பார்த்திபன் கேள்வி எழுப்பினார். நிலக் குத்தகையை ரத்து செய்ய அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட்டதா? சட்ட ரீதியாக முடிவெடுக்கப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். குத்தகையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்குத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன் விபத்து: பெண் பலி.. 10பேர் படுகாயம் - திருப்புத்தூர் அருகே சோகம்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:39:07 AM (IST)
