» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கர்நாடகாவில் ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்: தூத்துக்குடியில் முதல்வர் குமாரசாமி பேட்டி

வியாழன் 27, செப்டம்பர் 2018 10:27:33 AM (IST)



கர்நாடகாவில் 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும் என முதல்வர் குமாரசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக கர்நாடக மாநில முதல்வர் எச்டி குமாரசாமி விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா, சார் ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

பின்னர் கர்நாடகா முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிம் கூறும்போது, கர்நாடகாவில் தாமரை ஆபரேசன் குறித்து கவலை இல்லை. கர்நாடகாவில் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலை இல்லை. கர்நாடகாவில் 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும் எம்.எல்.ஏக்கள். எதிர்கட்சி முகாமுக்கு செல்வதாக வந்த தகவல் தவறானது என அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மூலம் திருச்செந்தூர் புறப்பட்டு சென்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

New Shape Tailors



Joseph Marketing

Anbu Communications



Thoothukudi Business Directory