» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேலுார் கூட்டுறவுவங்கி தேர்தல் வேட்பு மனு பெறப்பட்டது

வெள்ளி 14, செப்டம்பர் 2018 8:20:04 PM (IST)

துாத்துக்குடி மேலுார் கூட்டுறவு வங்கி தேர்தலுக்கு இன்று மீண்டும் வேட்பு மனு பெறப்பட்டது.

துாத்துக்குடி நகரில் உள்ள முக்கிய கூட்டுறவு வங்கிகளில் மேலுார் கூட்டுறவு வங்கியும் ஒன்று. இந்த வங்கியில் மற்ற வங்கிகள் போல் சென்ற மாதம் கூட்டுறவு தேர்தல் நடைபெற்றது. 11 பேர் கொண்ட நிர்வாககுழுவிற்கான தேர்தலுக்கான வேட்பு மனு பெறப்பட்டது.  பரிசிலனையின் போது ஏற்பட்ட தகராறில் வேட்பு மனுக்கள் கிழித்தெறியப்பட்டது.  நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் தேர்தல் நடத்த இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. 

மொத்தம் 62 பேர் தேர்தல் அதிகாரி மோகனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாளை (15 ம் தேதி) வேட்பு மனு பரிசிலனை நடைபெறுகிறது. வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக சார்பில் முன்னாள் வங்கி செயலாளர் ஏசாதுரை, முன்னாள் வாரியதலைவர் அமிர்தகணேசன் ஆகியோர் இரண்டு அணிகளாக போட்டியிடுகின்றனர். மற்றும் திமுக, அமமுக பிறகட்சிகளும் போட்டியிடுகிறது. வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing



Thoothukudi Business Directory