» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமுதாய வளைகாப்பு விழா: சீர்வரிசைப் பொருள்களை உதவி ஆட்சியர் அனு வழங்கினார்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 5:14:52 PM (IST)ஒட்டப்பிடாரத்தில் சமுதாய வளைகாப்பு விழாவில், உதவி ஆட்சியர் (பயிற்சி)  அனு, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், தேவா திருமண மண்டபத்தில், சமூக நலம் மற்றும் சத்தணவு திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவினை உதவி ஆட்சியர் (பயிற்சி)  அனு, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா ஆகியோர், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 400 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார். மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடத்தப்பட்ட வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகைள வழங்கினார்கள்.

பின்னர், உதவி ஆட்சியர் (பயிற்சி) பேசியதாவது: தமிழக அரசு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதனை வலியுறுத்தி, தாயுள்ளத்தோடு, கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்பகால பராமரிப்பு, குழந்தைகளுக்கு உணவூட்டு முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசி முறைகள் போன்ற தகவல்கள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களான புடவை, வளையல்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞசள், மஞசள் கயிறு இவைகள் அடங்கிய தாம்பூலத்தட்டு வழங்கப்படுகிறது. மேலும், 5 வகையான சாதத்துடன் துவையல் வகைகள், பல்வகைக் காய்கறிக்கூட்டு அப்பளத்துடன் விருந்தும் வழங்கப்படுகின்றது. இவ்வளைகாப்பு விழாவில் பங்கேற்று உள்ள 400 கர்ப்பிணி பெண்களுக்கும் இலவச மருத்துவப்பரிசோதனையானது உரிய முறையில் அரசு மருத்துவர்களால் வழங்கப்பட்டுள்ளது. நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற, கர்ப்பிணி பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். வேண்டும் என உதவி ஆட்சியர் (பயிற்சி) பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், இன்று ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் 168 கர்ப்பிணி பெண்களுக்கும், கருங்குளம் ஒன்றியத்தில் 165 கர்ப்பிணி பெண்களுக்கும், கயத்தார் ஒன்றியத்தில் 150 கர்ப்பிணி பெண்களுக்கும், கோவில்பட்டி ஒன்றியத்தில் 325 கர்ப்பிணி பெண்களுக்கும், ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 400 கர்ப்பிணி பெண்களுக்கும், புதூர் ஒன்றியத்தில் 150 கர்ப்பிணி பெண்களுக்கும், சாத்தான்குளம் ஒன்றியத்தில் 200 கர்ப்பிணி பெண்களுக்கும், திருவைகுண்டம் ஒன்றியத்தில் 255 கர்ப்பிணி பெண்களுக்கும், தூத்துக்குடி (ஒன்றியம்) 220 கர்ப்பிணி பெண்களுக்கும், தூத்துக்குடி (நகரம்) 160 கர்ப்பிணி பெண்களுக்கும், திருச்செந்தூர் ஒன்றியத்தில் 110 கர்ப்பிணி பெண்களுக்கும், உடன்குடி ஒன்றியத்தில் 126 கர்ப்பிணி பெண்களுக்கும், விளாத்திக்குளம் ஒன்றியத்தில் 160 கர்ப்பிணி பெண்களுக்கு என மொத்தம் 2589 கர்ப்பிணி பெண்களுக்கு சமூதாய வளைகாப்பு நடத்தப்பட்டு, சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது

இவ்விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துலெட்சுமி,  குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஒட்டப்பிடாரம் திலகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் வே.தேவிகா, வட்டார மருத்துவ அலுவலர் ஒட்டநத்தம்  க.தங்கமணி, ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் காளிராஜ், ஒட்டப்பிடாரம் ஆணையாளர் நவநீதகிருஸ்ணன், வட்டார வளர்ச்சி அலவலர் இசக்கியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Anbu Communications


CSC Computer Education
Thoothukudi Business Directory