» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் காசநோயாளர்களுக்கு சிறப்பு முகாம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 4:15:39 PM (IST)



கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது

திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் கடம்பூர் காசநோய் அலகின் சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் வரேவேற்று பேசினார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் காசநோய் பற்றியும் சிகிச்சை முறை பற்றியும் பேசினார். 

மாதம் தோறும் அரசு வழங்கும் ஊட்டச்சத்து தொகை பற்றியும் எடுத்துக் கூறினார். நோயாளிகள்  புரதம் சார்ந்த உணவுகள்  தினமும்  உணவில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு இலவச சத்துணவு வழங்கினார். மேலும் கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக காசநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தினமும் இலவச சத்துணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுகாதார பார்வையாளர் திவ்யா, மகேஸ், ஆய்வக  நுட்பனர் ராமலட்சுமி உட்பட பலர கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Anbu Communications


Joseph Marketing

Black Forest Cakes



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory