» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமுதாய வளைகாப்பு விழா: எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பங்கேற்பு.

வெள்ளி 14, செப்டம்பர் 2018 3:38:55 PM (IST)



சமுதாய வளைகாப்பு விழாவில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி, நட்டாத்தி ஊராட்சி, கொம்புக்காரன் பொட்டலில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆஷா சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நல திட்ட அலுவலர் ஜெயா முன்னிலை வகித்தார். 

சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.  இவ்விழாவில் ஆழ்வார்திருநகரி முன்னாள் யூனியன் துணை சேர்மன் ராஜ்நாராயணன் நட்டாத்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம், செம்பூர் விவசாய சங்க பிரதிநிதி நயினார், பண்டாரவிளை பால்துரை மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications




Thoothukudi Business Directory