» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்தியஅரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 2:02:05 PM (IST)




துாத்துக்குடியில் மத்தியஅரசின் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தியஅரசின் ரபேல் விமான பேர ஊழலை கண்டித்து துாத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் விவிடி சிக்னல் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள்மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், வடக்குமாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னாள் எம்எல்ஏ.,கள் வேல்துரை, டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ், பெருமாள்சாமி, வர்த்தககாங்கிரஸ் டேவிட் பிரபாகரன், மகிளா காங்கிரஸ் முத்துவிஜயா உள்ளிட்ட பல காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் பேசும் போது, மத்திய மோடி தலைமையிலான அரசு பணக்காரர்களுடன் கைகோர்த்து பல ஊழல்களை செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அந்த ஊழல்களை பொதுமக்களிடம் வெளிப்படுத்தி வருகிறது. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். ஏழைகள் வாழ்வு மலரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Anbu Communications



Thoothukudi Business Directory