» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த வாலிபர் கொலை: போலீஸ் விசாரணை

வெள்ளி 14, செப்டம்பர் 2018 10:40:27 AM (IST)

புளியம்பட்டி அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே அக்கா நாயக்கன்பட்டி கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு மகன் மகன் உதயக்குமார் (28). அப்பகுதியில் புரோட்டா கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாசாதேவி (25), இந்த தம்பதியருக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். 

இதனால், மாசாதேவி தனது குழந்தைகளுடன் கோவில்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், மாசாதேவியின் குடும்பத்தினர் அக்காநாயக்கன்பட்டி கிராம நாட்டான்மை ராஜாமணி, கொடியங்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மற்றும் ஊர் பெரியவர்கள் மூலம் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு உதயகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், சமரச பேச்சுவார்த்தையை ஏற்காத உதயகுமார் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டாராம். 

இந்நிலையில், நேற்றிரவு தனது புரோட்டா  கடையில் தூங்கிக் கொண்டிருந்த உதயகுமாரை மர்ம கும்பல் சராமரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்தததால் உதயகுமார் கொலை செய்யப்பட்டாரா? என மாசாதேவியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors




Joseph Marketing




Thoothukudi Business Directory