» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்கூட்டர் சீட் அடியில் வைத்திருந்த ரூ.19லட்சம் திருட்டு: கான்ட்ராக்டரிடம் மர்ம நபர்கள் கைவரிசை!!

வியாழன் 13, செப்டம்பர் 2018 5:22:07 PM (IST)

கோவில்பட்டியில் கட்டிட கான்ட்ராக்டர் ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த ரூ.19லட்சம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிகண்டன் (32), கட்டிட கான்ட்ராக்டர். இவர் தற்போது வீரவாஞ்சி நகரில் டாக்டர் ஒருவருக்காக வீடு கட்டும் பணியினை மேற்கொண்டு வருகிறார். இதற்காக நேற்று டாக்டரை சந்தித்து கட்டிட செலவிற்காக ரூ.10லட்சம் பணம் கேட்கவே, அவர் 10 லட்சத்திற்கான காசோலை கொடுத்துள்ளார். இந்த காசோலையை மணிகண்டன் வங்கியில் மாற்றியுள்ளார். மேலும் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2லட்சத்தை எடுத்துள்ளார். 

இது போக அவர் ஏற்கனவே ரூ.7லட்சம் வைத்திருந்தாராம். மொத்தமாக இந்த ரூ.19லட்சம் பணத்தையும் தனது ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு வீரவாஞ்சிநகரில் கட்டிடப் பணிகள் நடக்கும் இடத்திற்கு சென்றாராம். அங்கே வெளியே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, கட்டிடப் பணிகளை பார்வையிட்ட பின், சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் அவர் வைத்திருந்த ரூ.19லட்சம் திருடுபோயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications


Joseph Marketing


New Shape Tailors



Thoothukudi Business Directory