» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

வியாழன் 13, செப்டம்பர் 2018 10:31:47 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் பகுதி அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மின்சார வாரிய ஊரக செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 

எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் மந்திகுளம், செங்கல்படை, பிள்ளையார்நத்தம், கமலாபுரம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களிலும், கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களிலும், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சனிக்கிழமை

மஞ்சள் நீர்க்காயல், ஸ்ரீவைகுண்டம், நாகலாபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. 

இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையும், ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்திப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

மேலும் நாகலாபுரம், குருவார்பட்டி, கோடங்கிபட்டி, வாதலக்கரை, காடல்குடி, துரைச்சாமிபுரம், பூதலாபுரம், சங்கரலிங்கபுரம், சல்லிசெட்டிப்பட்டி, சிவலார்பட்டி, வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes

New Shape Tailors


CSC Computer Education

Joseph Marketing

Nalam PasumaiyagamThoothukudi Business Directory