» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மத்திய அரசின் விருது

செவ்வாய் 11, செப்டம்பர் 2018 5:57:56 PM (IST)தமிழகத்தில், மத்திய அரசின் 7 முக்கிய திட்டங்களை, சிறப்பாக செயல்படுத்திதற்கான விருதினை தூத்துக்குடி மாவட்டத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கினார்.

கிராமப்புற மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் மேலும் அவர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை பெருக்கவும், சுற்றுப்புற தூய்மையை பேணுதல் மற்றும் ஊராட்சி அமைப்புகளை பலப்படுத்துதல் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இனங்களை வலியுறுத்தும் வகையிலும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்த கிராமப்புற மக்களின் கருத்துக்களை கண்டறியும் வகையிலும் மத்திய அரசு 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் தேதி முதல் ஜீன் 5 ஆம் தேதி வரை கிராம சுயாட்சி இயக்கத்தினை மாநிலத்தில் உள்ளஅனைத்து ஊரகப் பகுதிகளிலும் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தமிழக அரசின் உத்தரவின்படி, அனைத்து மாவட்டத்திலும், கிராம சுயாட்சி நிகழ்வுகள் சிறப்பாக மேற்கொள்ள தெரிவிக்கபட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், கிராம சுயாட்சி இயக்க நிகழ்வுகள், ஏப்பரல் 14 முதல் ஜூன் 5ம் தேதி வரை, மாவட்டத்தில் உள்ள 50 கிராமங்கள் கண்டறியப்பட்டு, 7 முக்கிய திட்டங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதான்மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை எரிவாயு இணைப்புகள் வழங்கப்படாத 1987 வீடுகள் கண்டறியப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்புகளும், ஏற்கனவே, சௌபாக்கியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் இலவச மின் இணைப்புகளும், உஜாலா திட்டத்தின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 50 கிராமங்களில் 19,362 LED விளக்குகள் மானிய விலையிலும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிக் கணக்கு துவங்காத 10,412 பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஊரகப் பகுதியில் உள்ள வங்கிக் கிளைகளில் வங்கிக் கணக்குகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கிராமங்களில் 12,305 பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுககு அரசின் பங்களிப்புடன் கூடிய வங்கி கணக்கு மூலமாக காப்பீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பீமா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 15,832 பயனாளிகள் கண்டறியப்பட்டு அனைவருக்கும் அரசின் பங்களிப்புடன் கூடிய கூடிய வங்கி கணக்கு மூலமாக விபத்து காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திர தனுஷ் இயக்கத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு வயதிற்குட்பட்ட 69 குழந்தைகள் மற்றும் 38 கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு, நோய் தடுப்பு உறுதி செய்யப்பட்டு, 7 முக்கிய திட்டங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. கிராம சுயாட்சி இயக்க காலத்தில், மத்திய அரசின் 7 முக்கிய திட்டங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்ட நடவடிக்கையில் தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் முதன்மையான மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது. 

இன்று (11.9.2018) புது டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற, கிராம சுயாட்சி இயக்க விழாவில், தமிழகத்தில், கிராம சுயாட்சி இயக்கத்தின் போது மத்திய அரசின் 7 முக்கிய திட்டங்களை, சிறப்பாயல்படுத்திதற்கான விருதினை தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கினார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புப் பணிகள், செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் விருது மற்றும் சான்றிதழை பெற்றுக் கொண்டார்கள். மத்திய இணை அமைச்சர் ஊரக வளர்ச்சித்துறை ராம் கிர்பல் யாதவ் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

நிஹாSep 12, 2018 - 11:03:31 AM | Posted IP 141.1*****

விருதை துணை வட்டாட்சியருக்கு அல்லவா கொடுக்க வேண்டும்?

தமிழ்ச்செல்வன்Sep 12, 2018 - 09:49:49 AM | Posted IP 141.1*****

துப்பாக்கி சூட்டுக்கு விருது எதுவும் கொடுக்கலியா? என்னய்யா அநியாயமா இருக்கு!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications

Nalam PasumaiyagamThoothukudi Business Directory