» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்: ஆட்சியர்

வெள்ளி 7, செப்டம்பர் 2018 12:50:40 PM (IST)

தூத்தக்குடி மாவட்டத்தில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதலமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். நமது கொண்டாட்டங்களினால் சுற்றுச்சூழல், குறிப்பாக நீர்நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. 

எனவே, பொது மக்கள் வருகின்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் வழிமுறைகளை பின்பற்றுவது நமது நீர் நிலைகள் மாசடைவதை தடுக்க மிகவும் பேருதவியாக அமையும். எனவே, எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு, சுடப்படாததாகவோ அல்லது கிழங்கு மாவு, ஜவ்வரிசி ஆலைகழிவுகள் போன்ற வேதிப்பொருட்கள் கலக்காத சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டோ தயாரிக்கப்பட வேண்டும் இவற்றில் பூசப்படும் வர்ணங்கள் நீரில் கரையும் தன்மையுடையதாகவும் (water solube), எவ்வித நச்சு தன்மையற்றதாகவும் (non – toxic) இயற்கை வர்ணங்களை (natural colours) உடையதாகவும் இருத்தல் வேண்டும். நச்சுத்தன்மையுடைய, மக்கும் தன்மையற்ற வேதிப்பொருட்களை கொண்டு தாயரிக்கப்படும் வர்ணங்களை விநாயகர் சிலைகளில் பயன்படுத்துதல் கூடாது.

விநாயகர் சிலைகள் காவல் துறையினரால் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ள இடம் மற்றும் ஊர்வலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. மேலும், ஊர்வலம் மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது. விநாயகர் சிலைகள் அனுமதி அளிக்கப்பட்ட நீரிநிலைகளில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும். சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் முன்னர் அவற்றில் காணப்படும் பூக்கள், மாலை, இலை, துணி மற்றும் பிற ஆபரணங்கள் நீக்கப்பட வேண்டும். இவற்றில் மக்கும் பொருட்களை உரமாக்கி பயன்படுத்தலாம்.

விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதனால் சுற்றுச்சூழல் மாசு படாதிருப்பதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்துறை மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் ஆகியவை பரிசீலித்து தூத்துக்குடி மாவட்டத்தில் 1. முத்தையாபுரம் கடற்கரை 2. திரேஸ்புரம் கடற்கரை, 3. திருச்செந்தூர் கடற்கரை 4. குலசேகரபட்டினம் கடற்கரை மற்றும் 5. வேம்பார் கடற்கரை ஆகிய இடங்களில் கரைக்கலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது..

விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் காணப்படும் தண்ணீரின் தரம் சிலைகள் கரைப்பதற்கு முன்னர், சிலைகள் கரைக்கப்படும் பொழுது மற்றம் சிலைகள் கரைக்கப்பட்ட பின்னர் என மூன்று நிலைகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டும், குறிப்பிட்ட வழி முறைகளின் படி நீர்நிலைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்ததாத வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் கரைத்து, எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications
CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory