» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

வெள்ளி 31, ஆகஸ்ட் 2018 11:12:50 AM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவில் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. மேலும், குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற வேண்டும் என்றும், 6 வாரங்களுக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. 

இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் வசீப்தர்.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலை பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது. புதிய நீதிபதி தலைமையிலான குழு 6 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஒருவன்Aug 31, 2018 - 04:27:04 PM | Posted IP 162.1*****

பேசாமல் வேற இடத்தில வடை நாட்டுல குஜராத்துல கொண்டு போய் வைக்க வேண்டியது தானே ... வடை நாட்டு (இந்தி) கார கம்பெனி தமிழ்நாட்டில் எதுக்கு???

தூத்துக்குடி makalAug 31, 2018 - 12:12:29 PM | Posted IP 162.1*****

தருண் அகர்வால் - அணில் அகர்வால் - கண்டிப்பாக ஸ்டெரலிட்டா ஓபன் பன்னிருவனுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications


Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory