» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேல்நிலைப்பள்ளிக்கு அமைச்சர்,ஆட்சியர் பாராட்டு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 8:26:45 PM (IST)




ஓட்டப்பிடாரம் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்தில் முத்துக்கருப்பன் நினைவு அறக்கட்டளை சார்பில் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொழிற்பயிற்சி பள்ளி, ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், ஆட்சியாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் தொடக்க, மேல்நிலைப்பள்ளி, வகுப்பறைகள், உணவு அருந்தும்அறை, சமையலறை, பொருட்கள் வைப்பு அறை, ஆர்.ஓ.குடிநீர், மாணவ மாணவிகளின் விடுதிகள், கழிப்பிட வசதி உள்பட பல்வேறு நிலைகளை ஆய்வு செய்தனர்.மாணவ மாணவிகளுக்காக வழங்கப்படும் மத்திய உணவினை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஆட்சியாளர் மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களிடம் சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை கேட்டறிந்தார். மாணவ மாணவிகளுக்கு அனைத்து வகுப்புகளிலும் பெஞ்சு மற்றும் டேபிள் அமைத்திடவும், விடுதி மாணவர்களுக்கு டைனிங் டேபிள் அமைத்து தந்திட பள்ளி நிர்வாகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தினார். 

மேலும் பள்ளி சுற்றுபுறங்கள், மாணவ-மாணவிகள் உணவு விடுதிகள் மற்றும் இருப்பிடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாக இருப்பதாக அமைச்சர் மற்றும் ஆட்சியாளர் பள்ளி நிர்வாகத்தைப் பாராட்டினர். இதில் ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் முரளிதரன், ஆதிதிராவிட அலுவலர் கீதா, கோட்டாச்சியர் விஜயா, வட்டாச்சியர் ஜான்சன்தேவசகாயம், வட்டார வளர்ச்சி அலுவலர் நவநீதகிருஷ்ணன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கியப்பன், சில்லாங்குளம் பள்ளி நிர்வாக இயக்குநர் பாலமுருகன், கண்காணிப்பாளர் சரோஜா, செயலாளர் பொன்னம்மாள், தலைமை ஆசிரியர்கள் கற்பகம், ஜெயக்கொடி, ஸ்டீபன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

சங்கர்Aug 11, 2018 - 10:04:09 AM | Posted IP 162.1*****

மேலும் மேலும் பாராட்டுக்கள் உரித்தாகுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

crescentopticals


New Shape Tailors




Thoothukudi Business Directory