» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் பேரூராட்சி பகுதி கடைகளில் திடீர் சோதனை

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 7:47:58 PM (IST)



நாசரேத் பேரூராட்சி பகுதி கடைகளில் திடீரென பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை நடைபெற்றது.

துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் வைத்துள்ளனரா என செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி திடீரென சோதனை நடத்தினார். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பிளாஸ்டிக் உபயோத்தை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரிலும், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபூபக்கர் அறிவுறுத்தலின் பேரிலும் நாசரேத் பேரூராட்சி பேரூந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களில் செயல் அலுவலர் தலைமையில் பணியாளர்கள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அரசின் உத்தரவுப்படி இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை நிறுத்தவில்லை என்றால் தங்களது உரிமம் இரத்து செய்யப்படும் என செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி எச்சரிக்கை விடுத்தார். மேலும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு துணிப்பை அல்லது பேப்பர்களில் பார்சல் செய்து வழங்குமாறு அறிவுரையும் வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி, இளநிலை உதவியாளர் கருணா, வரி வசூலர் சாத்தாக்குட்டி, பதிவறை எழுத்தர் முத்துலெட்சுமி, பேரூந்து நிலைய வசூலர் ஜெயந்திரன், அலுவலக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், பிட்டர் முருகன், குடிநீர் திட்ட பணியாளர் கண்ணன், எலக்ட்ரீசியன் செல்வராஜ் மற்றும் பரப்புரையாளர்கள் சுபாஷினி, பேச்சியம்மாள், சாரதா உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

SundaramaranAug 10, 2018 - 09:46:24 PM | Posted IP 162.1*****

Good action congratulations all ஒற்க்கேற்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Joseph Marketing

crescentopticals




New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory