» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்கடி மாவட்டத்தில் புதிய தாலூகா உதயம்: அமைச்சருக்கு வருவாய்த்துறையினர் நன்றி

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 3:49:49 PM (IST)



ஏரலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 

தூத்துக்கடி மாவட்ட நிர்வாக நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் ஏரலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அடைத்திட  வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக கடந்த 22.11.17 அன்று நடைபெற்ற பாரத ரத்னா எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது முதல்வர் பழனிசாமி ஏரல் புதிய வருவாய் வட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். 

இதையடுத்து 23.7.18 அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் 10வது வருவாய் வட்டமாக ஏரல் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏரல் தாலூகா உருவாக அரசாணை வெளியிட அனைத்து முயற்சிகள் மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலகர்கள் சங்கம் சார்பாக  அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அவர்கள்,  வட்டாட்சியர்கள் செல்வகுமார், ஞானராஜ், ராமச்சந்திரன், துணை வட்டாட்சியர்கள், செல்வகுமார், ஜஸ்டின், கலையரசன், வாமனன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், அதிமுக மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் என். சின்னத்துரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals

New Shape Tailors








Thoothukudi Business Directory