» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வாய்ப்பே இல்லை : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேட்டி

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 12:21:20 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார். 

இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:  கர்நாடகா, கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், மேட்டூர் அனை 120 அடியைத் தாண்டி நிரம்பி வழிகிறது. 40ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடை மடை வரை தண்ணீர் வந்துள்ளதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் எரலை தலைமையிடமாகக் கொண்டு 10வது தாலுகா உதயமாக உள்ளது. இதனை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைப்பதாக இருந்தது. இது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், சுதந்திர தினத்திற்கு பின்னால் புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்படும். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வாய்ப்பே இல்லை. பசுமை தீர்ப்பாயம் நிர்வாக அனுமதி வழங்கியிருந்தாலும், உற்பத்திக்கு அனுமதி அளிக்கவில்லை. இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது என பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கப்பட்டது. ஆனால், அதில் சட்ட சிக்கல் இருந்ததால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரவோடு இரவாக அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டதால் அங்கு அடக்கம் அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் இவ்வழக்கு யாரால் தொடரப்பட்டது என்பது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. அம்மாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடரப்பட்ட வழக்கால் திமுகவினரே அதில் சிக்கிக் கொண்டனர். 

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளையும் செய்யும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும், அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் உத்தரவிட்டார். இந்த விசயத்தில் தமிழக அரசு மரபுப்படிதான் நடந்துள்ளது. ஆனால் திமுகவினர் மரபை மீறி செயல்படுகிறார்கள் என்றார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் அதிமுக மாவட்ட செயலாளர்,  சி.த.செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ மோகன், அதிமுக நிர்வாகிகள் சின்னதுரை, அமிர்தகணேசன், பிடிஆர் ராஜகோபால், சண்முகவேல், முருகன், பிஎன் ராமகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து

yovanAug 10, 2018 - 06:59:43 PM | Posted IP 162.1*****

ஆமா டிராபிக் ராமசாமி dmk சதுர செயலாளர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


crescentopticals

Thoothukudi Business Directory