» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் பெண் காயம் : திமுக செயலாளர் கைது

புதன் 8, ஆகஸ்ட் 2018 12:10:35 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே இரண்டு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடை பெற்றதால் கண்ணாடிகள்உடைந்தன. பெண் காயமடைந்தார். இது தொடர்பாக திமுக செயலாளர் கைது செய்யப்பட்டார். 

துாத்துக்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு அரசுப்பேருந்தும் தனியார் பேருந்தும் நேற்று அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது. பேருந்து நட்டாத்தி கிராமம் அருகே செல்லும் போது இரண்டு பேர் பேருந்தை வழிமறித்து திமுக தலைவர் கருணாநிதி இறந்துவிட்டார் பேருந்தை இயக்குகிறார்களா என கேட்டு பேருந்து மீது கல்வீசி தாக்கியதில் இரு பேருந்துகளின் கண்ணாடி களும் உடைந்தது. இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த பண்ணைவிளை கிராமத்தை சேர்ந்த சுகுணாதேவராஜ் என்பவரது மனைவி பரிபூரணம் (65) என்பவர் தலையில் கல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இவர் உடனே சாயர்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் சாயர்புரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் பட்டாண்டிவிளை பகுதியை சேர்ந்த இன்னாசிமுத்து மகன் சேகர் (32) ஆதிலிங்கம் என்பவரது மகன் கிருஷ்ணன் (31) ஆகியோர் கல்வீசி தாக்கியது தெரியவந்துள்ளது. இதில் சேகர் அப்பகுதியில் திமுக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை கைது செய்த போலீசார் கிருஷ்ணனை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Joseph Marketing

crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors




Thoothukudi Business Directory