» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கிச்சூட்டில் பலியானவரின் மனைவி தற்கொலை முயற்சி : தூத்துக்குடியில் சோகம்

வியாழன் 12, ஜூலை 2018 11:33:04 AM (IST)

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியான கிளாஸ்டன் என்பவரின் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கிளாஸ்டன் (38). இவர் தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிக் சூட்டில் உயிரிழந்தார். இவரது மனைவி ஜேசு ராணி (35), கிளாஸ்டன் மரணம் அடைந்த நாள் முதல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 

உறவினர்கள் அவரைத் தேற்றிப்பார்த்தும் அவர் சோகத்தில் இருந்து மீளவில்லை. இந்நிலையில், நேற்று அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD



New Shape Tailors

Joseph Marketing



crescentopticals



Thoothukudi Business Directory