» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் தலைமையில் ஆலோலசனைக் கூட்டம்

வியாழன் 12, ஜூலை 2018 11:13:14 AM (IST)தூத்துக்குடியில் தூய பனிமய மாதா திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தூய பனிமய மாதா பேராலய பெருவிழா நிகழ்வுகள் தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலய பெருவிழா நிகழ்வுகள் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 06 வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள அதிக அளவிலான மக்கள் வருகை இருக்கும். எனவே, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி மூலம் செய்து தர வேண்டும். குறிப்பாக குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். 

இத்திருவிழாக்களில் இரவிலும் அதிகம் மக்கள் கூடுவதால் தேவையான விளக்குகளை பொறுத்த வேண்டும். பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளையும் செய்திட வேண்டும். தீயணைப்புத் துறையின் மூலம் தேவையான தீ தடுப்பு நடவடிக்கைளையும், மருத்துவதுறையின் மூலம் முதலுதவி சிகிச்சை மையங்களையும், 108 வாகன வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். மாநகராட்சியின் மூலம் கூடதல் பணியாளர்களை நியமித்து துப்பரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து துறையின் மூலம் தேவையான பேருந்து வசதிகளை செய்து தர வேண்டும். காவல்துறையின் மூலம் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்திட வேண்டும். மின்துறையின் மூலம் மின்தடையின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன், மாநகராட்சி ஆணையர் அல்பி ஜாண் வர்க்கீஸ் சார் ஆட்சியர் பிரசாந்த் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், புனித.பனிமய அன்னை திருத்தலப் பேராலய பங்கு தந்தை அருள் தந்தை.லெரின் டீரோஸ், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பரிதா ஜெரின், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, உதவி ஆணையர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமா சங்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJul 12, 2018 - 02:05:32 PM | Posted IP 162.1*****

மொதல்ல கோவிலை சுற்றி உடைத்த சாலையை திருவிழா ஆரம்பிக்கும் முன்பு சரிசெய்து தாருங்கள் கனவான்களே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam


New Shape Tailors

Anbu Communications
Thoothukudi Business Directory