» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தகுதியுடைய பணியாளர்களுக்கு மட்டுமே நற்சான்றிதழ் வழங்க வேண்டும் : சமூக ஆர்வலர் கோரிக்கை

வியாழன் 12, ஜூலை 2018 11:05:35 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுடைய பணியாளர்களுக்கு மட்டுமே நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு : தூத்துக்குடி மாவட்டத்தில் வருடந்தோறும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம்.அதனை தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு சகாச நிகழ்ச்சிகளும் நடைப்பெறும் பின்பு அரசு துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் ,போராட்ட தியாகிகளின் வாரிசுகள் பிற தன்னார்வ பிரதிநிதிகளுக்கு சான்றிதழுடன் கூடிய பரிசு கோப்பை வழங்கி வருகிறது.

இவற்றில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அரசு துறையை சேர்ந்த பணியாளர்களுக்கும், சீருடை பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஆட்சேபனைகள் எழுந்தன. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்,சுகாதாரம்,கல்வி என ஐம்பதிற்கும் மேற்பட்ட துறைகள் உள்ள நிலையில் சில துறையை சேர்ந்த பணியாளர்களுக்கு மட்டும் நற்சான்றிதழ் வழங்குவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. நற்சான்றிதழ் பெறும் பணியாளர்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 

பல்வேறு புகார்கள் மக்களிடம் இருந்து வரும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்குவது மாவட்ட நிர்வாக திறன்கள் மீது நம்பிக்கையற்றதாக எண்ணத் தோன்றிவிடும். காவலர் மற்றும் அரசு ஊழியர்கள் நற்பணிகளை செய்தற்கான எவ்வித செயல்பாடுகளும் இல்லாத பலருக்கு இவ்வாறான பரிசுடன் கூடிய சான்றிதழ் வழங்கி வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15 அன்று நடைப்பெறும் சுதந்திர தினத்தன்று பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்க உள்ள நிலையில் தகுதியான நபர்களை வெளிப்படையாக அறிவித்து பரிசுடன் கூடிய நற்சான்றிதழ் வழங்கிட வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஐ.ஓ.பி வங்கியின் துறைமுக கிளை இடமாற்றம்

வியாழன் 20, செப்டம்பர் 2018 8:34:08 AM (IST)

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


Joseph Marketing


New Shape Tailors




Thoothukudi Business Directory