» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளையாட்டு மைய விடுதிகளில் மாணவர் சேர்க்கை: ஜூலை 18-ல் இரண்டாம் கட்டத் தேர்வு

வியாழன் 12, ஜூலை 2018 10:44:45 AM (IST)

முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான விளையாட்டுகளில் பயிற்சி பெற மாநில அளவிலான இரண்டாம் கட்ட தேர்வு வரும் 18 -ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளும், சென்னை, ஈரோடு ஆகிய இடங்களில் சிறுமியர்களுக்கான இந்த விளையாட்டு மைய விடுதிகளும் செயல்படுகின்றன. இவற்றில் காலியாக உள்ள இடங்களுக்கான விளையாட்டுகளில் பயிற்சி பெற 6, 7, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்கள் சேர்க்கைக்கு, மாநில அளவிலான இரண்டாம்கட்ட தேர்வு, வரும் 18 -ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

போட்டி தேர்வு நடைபெறும் இடங்கள்: டேக்வோண்டா (ஆண்கள்), ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆண்கள், பெண்கள்), மேசைப்பந்து (பெண்கள்), நீச்சல் (ஆண்கள்), தடகளம் (ஆண்கள், பெண்கள்) ஆகிய விளையாட்டுகளுக்கான போட்டிகள், சென்னை, பெரியமேடு, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகின்றன. இறகுப் பந்து (ஆண்கள், பெண்கள்) போட்டி சென்னை, நேரு பூங்கா விளையாட்டு வளாகத்திலும், டென்னிஸ் (ஆண்கள்) போட்டி சென்னை, நுங்கம்பாக்கம், டென்னிஸ் விளையாட்டரங்கிலும் நடைபெறுகின்றன.

விளையாட்டில் சிறந்து விளங்கும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2018 -19 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை ஜூலை 12 (வியாழக்கிழமை) முதல் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.  www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18 -ஆம் தேதி காலை 8 மணிக்குள் மாநிலத் தேர்வு மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
மாவட்ட விளையாட்டு அரங்கம், 
ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி - 628 001.
தொலைபேசி : 0461 2321146 .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Joseph MarketingNew Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory