» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாட்டு வண்டி போட்டி: ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு முதல் பரிசு!!

வியாழன் 12, ஜூலை 2018 10:17:34 AM (IST)



விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி போட்டிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி வண்டிகள் முதல் பரிசினை தட்டிச்சென்றன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் வீரகாஞ்சிபுரத்தில் இருக்கும் ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் ஆனி பொங்கல் விழாவினை முன்னிட்டு, சின்னமாடு, பூஞ்சிட்டு என்ற 2 பிரிவுகளில் மாட்டு வண்டிபோட்டிகள் நடைபெற்றது. 12 கிலோமீட்டர் தூரம் கொண்ட சின்ன மாட்டு வண்டிபோட்டியில் 12 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இந்த போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி புல்லட் அலியார் மாட்டு வண்டி முதலிடம் பிடித்து பரிசினை தட்டிச்சென்றது. 

2வது இடத்தினை மதுரை பரவை ஸ்ரீமுத்து நாயகி மாட்டு வண்டியும், ஏனாதி ஏடிஎம் மாட்டு வண்டி 3வது இடத்தினையும் பிடித்தன. இதனை தொடாந்து 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் 13 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில் விளாத்திகுளம் சிதம்பரநகர் அருண்பாண்டி மாட்டுவண்டி முதல் பரிசினை தட்டிச்சென்றது. இரண்டவது பரிசினை நெல்லை வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டி பெற்றது. 3வது இடத்தினை உசிலங்குளம் கருப்புத்துறை பாண்டி மாட்டு வண்டி பிடித்து.பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளின் உரிமையாளர் களுக்கும், முதல் கொடி வாங்கிய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD





New Shape Tailors






Thoothukudi Business Directory