» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - பெங்களுரூ புதிய விமான சேவை கோலாகலமாக தொடங்கியது

ஞாயிறு 1, ஜூலை 2018 4:57:31 PM (IST)



தூத்துக்குடி - பெங்களூர் இடையே ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூலம் நேரடி விமான சேவை இன்று கோலாகலமாக துவங்கியது.

தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992ம் ஆண்டு துவக்கப்பட்டு விமான சேவை நடந்து வருகிறது.  தற்போது சென்னை - தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூலம் தினமும் 2 விமானங்கள் இயக்கப்படுகிறது. மேலும், இன்டிகோ மூலம் விமான சேவையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.  இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் மூலம் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு நேரடி விமான சேவை ஜூலை 1ம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. 

இதையொட்டி 48 பயணிகளுடன் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு மாலை 4.26 மணிக்கு வந்தடைந்தது.  முதன்முதலாக வருவதையொட்டி தண்ணீர் பீச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர், மாலை 4.56 மணிக்கு 72 பயணிகளுடன் தூத்துக்குடியில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றது.  துவக்கவிழா நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன், மேலாளர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வணிக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.



மக்கள் கருத்து

balasunderJul 2, 2018 - 02:37:03 PM | Posted IP 172.6*****

ப்ளீஸ் மும்பை டு சென்னை

பெனிலன்Jul 2, 2018 - 08:50:43 AM | Posted IP 172.6*****

தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு விமானம் இயக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். துறைமுக மற்றும் கப்பல் தொழிலைச் சார்ந்து தூத்துக்குடி மாநகர், புன்னக்காயல் மற்றும் ஏனைய கடலோர மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மும்பை செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. பிற தொழில்காரணங்களுக்காகவும், திருநெல்வேலி தூத்துக்குடி மக்கள் அதிகமானோர் மும்பைக்கு பயணித்துக்கொண்டே இருக்கின்றனர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஐ.ஓ.பி வங்கியின் துறைமுக கிளை இடமாற்றம்

வியாழன் 20, செப்டம்பர் 2018 8:34:08 AM (IST)

Sponsored Ads



Joseph Marketing

New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals



Thoothukudi Business Directory