» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.56.197.05 கோடியை எட்டி சாதனை : நிர்வாக இயக்குநர் பேட்டி!

திங்கள் 25, ஜூன் 2018 9:08:02 PM (IST)தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 2017 மற்றும் 18 ஆம் நிதியாண்டில் 3.76 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ 56,197.05 கோடியை எட்டியுள்ளதாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை அதிகாரி கே.வி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு கடந்த 96 ஆண்டுகாலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார்துறை வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியாகும். இந்தியாவில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 1131 ஏடிஎம் மையங்கள் என தனது விரிவாக்கத்தை ஏற்படுத்தி 4 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. வங்கியின் 2017- 18ம் ஆண்டின் தணிக்கை முடிவுகள் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் முழுமை செய்யப்பட்டது. 

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் வங்கியின் தலைவர் எஸ்.அண்ணாமலை மற்றும் இயக்குநர்கள் முன்னிலையில், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை அதிகாரி கே.வி.ராமமூர்த்தி வங்கியின் 2017- 18ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2017 -18 நிதியாண்டில் பல்வேறு குறிப்பிடதக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்கு காரணம் வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குநர் குழு தரும் உற்சாகம். மேலும், வங்கியின் அனுகுமுறை, வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பு, வாடிக்கையாளர்கள் தரும் பொன்னான ஆதரவு ஆகியவைதான்.

கடந்த 2017- 18 நிதியாண்டில் 3.76 சதவிகித வளர்ச்சியாக தனது மொத்த வணிகத்தில் ரூ.56.197.05 கோடியை எட்டியுள்ளது. வைப்புத்தொகை ரூ.32.428.33 கோடி, கடன் ரூ.23.768.72 கோடி என்ற நிலையில் உள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 9.79 சதவிகித வளர்ச்சியடைந்து ரூ.8.210.61 கோடியாக உள்ளது.  விவசாயம், குரு, சிறு தொழிற்கடன், வியாபார கடன், வீட்டு கடன், கல்வி கடன் ஆகியவைகளுக்கு டிஎம்பி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முன்னுரிமை துறைகளுக்கு டி.எம்.பி. வழங்கிய மொத்த கடன்கள் ரூ.12.960.75 கோடிகளிலிருந்து ரூ.14.651.54 கோடியாக உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 13. 05 சதவிகிதமாகும். ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள விலக்கான 40 சதவிகித இலக்கைவிட அதிகமாக 65.38 என்ற விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. எம்.எஸ்.எம்.இ துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்தக்கடன்கள் 7.559.55 கோடியிலிருந்து 8.247.68 கோடியாக உயர்ந்துள்ளது. 

வங்கியின் வைப்புத்தொகை ரூ.32.428. 33 கோடி (கடந்த ஆண்டு ரூ.32.190.15 கோடி) நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை ரூ.8.210.61 கோடி கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில், 9.79 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.875.63 கோடியிலிருந்து 1005.99 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் 1.150.81 கோடியிலிருந்து 1.09.73 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர மதிப்பு ரூ.3ஆயிரத்து 224 கோடியிலிருந்து ரூ.3ஆயிரத்து 405 கோடியாக உயர்ந்துள்ளது. 5.61 சதவிகித வள‌ர்ச்சியாகும். வட்டி வருமானம் ரூ.3.250.49 கோடி. வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வட்டி 2.040.76 கோடியாகும்.

வங்கியின் பங்குதாரர்களுக்கு இடைக்கால லாப பங்கீடு ஒரு பங்கிற்கு 12சதவிகிதம் வழங்கப்படுகிறது. டிஎம்பியின் முக மதிப்பு ரூ.10ஆகும். தற்போதைய புத்தக மதிப்பு 241.71 ஆகும். கடந்த ஆண்டு 4புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளது. 68 ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 5 இ- லாபி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடன் பரிசீலனைகளை விரைவுபடுத்தும் வகையில் எம்.எஸ்.எம்.இ. மையங்கள் சென்னை, கோவை, தூத்துக்குடியில் துவக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வில்லேஜ் திட்டம் கூட்டாம்புளி மற்றும் கன்னிராஜபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது. வங்கியின் 8 கிளைகள் ஒரு அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் தரப்பட்டுள்ளது. வங்கி விவசாயத்துறைகளுக்கான வங்கி சேவை சமூக நலன் சார்ந்த‌ செயல்பாடு அரசின் திட்டங்கள் செயல்படுத்துதல், முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்குதல் ஆகியவற்றில் 2ம் இடத்திற்கான விருதுகளை அசோசெம் விருது வழங்கியுள்ளது.

வரும் 2018- 19க்கான வணிக திட்டங்கள் 

புதிதாக 30கிளைகள் மற்றும் 10 இ-லாபி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மும்பையில் புதிதாக என்.ஆர்.ஐ. மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் விஜ‌யவாடா ஆகிய இடங்களில் இணைப்பு அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

வரும் 2018 -19க்கான வணிக இலக்கு

மொத்த வணிக இலக்கு ரூ.71.500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த வைப்புத்தொகை இலக்கு ரூ.40.800 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த கடன் வழங்குவதற்கான இலக்கு 30.700 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கினை தொகையினை 30சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகர லாபம் ரூ.520 கோடியாக உயர்த்த இலக்கு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேட்டியின்போது வங்கி இயக்குநர்கள் எஸ்.ஆர்.அசோக், பி.சி.ஜி. அசோக், அனுப்குமார், ஏ.சிதம்பரநாதன், எஸ். எழில் ஜோதி, பி.எஸ்.கேசவ மூர்த்தி, பி.விஜயதுரை, விவிடி என். நிரஞ்சன்கனி, கே.நாகராஜன், கே.வி.ராஜன், பொதுமேலாளர்கள் எஸ்.செந்தில் ஆனந்தன், ரவீந்திரன், எம்.ஆவுடைநாயகம், பி.சூரியராஜ், டி.இன்பமணி உடபட வங்கியின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

RamanJun 26, 2018 - 08:03:09 AM | Posted IP 162.1*****

Improve in net banking

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Anbu CommunicationsNew Shape Tailors

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory