» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விசாரணை

திங்கள் 25, ஜூன் 2018 5:56:47 PM (IST)

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 மற்றும் 23ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விசாரணையில் கலந்து தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம்.

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22 மற்றும் 23ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தனர். இதில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த, 4 பேர் மரணமடைந்துவிட்டார்கள். 

இது குறித்து விசாரணை செய்வதற்காக. இந்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் எதிர்வரும் 28/29/30.6.2018 ஆகிய 3 நாட்கள் (வியாழன், வெள்ளி, சனி) தூத்துக்குடிக்கு வருகை தருகிறது. இந்த விசாரணையானது மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 11.00 மணிக்கு ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கீழ்குறிப்பிட்டவர்கள் உயிரிழந்து உள்ளார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான விசாரணை 28.6.2018 அன்று காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைந்துள்ள, தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கான அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

விசாரணையின் போது, உயிரிழந்த தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள்/ பாதிக்கப்பட்டவர்கள்/ பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை / கோரிக்கைகளை நேரில் பதிவு செய்யலாம் என இந்திய அரசின் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, தாழ்த்தப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சார்ந்தவர்கள் தவறாது நேரில் கலந்து கொள்ளுமாறு தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph MarketingThoothukudi Business Directory