» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வாலிபர் கொலை: மாமனார், சகலை கைது

திங்கள் 25, ஜூன் 2018 5:24:15 PM (IST)

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை தொடர்பாக அவரது மாமனார், மற்றும் சகலையை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் விக்ரமன் மகன் ஹரிக்குமார் (27). எலக்ட்ரீசியனான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். திருமணத்திற்கு பின்னர் ஹரிக்குமார் தனது மனைவி, மகனுடன் தூத்துக்குடி அண்ணாநகர் 10–வது தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். ஹரிக்குமாருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கவிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து கவிதாவை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த 22–ந் தேதி காலையில் மில்லர்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் ஹரிக்குமார் இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஹரிக்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹரிக்குமார் இரும்பு கம்பியால் அடிக்கப்படும், கழுத்தை நெறித்தும் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரங்கள் இருந்ததாக தெரியவந்தது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இதுதொடர்பாக கவிதாவின் தந்தை சுப்பிரமணி, அக்காள் கணவர் சத்திய நாராயணா ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியானது. 

கவிதா தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதை அறிந்து  அங்கு வந்த சுப்பிரமணி, சத்திய நாராயணா ஆகிய இருவரும் சேர்ந்து ஆத்திரத்தில் ஹரிக்குமாரை இரும்பு கம்பியால தாக்கியுள்ளனர். இதில் ஹரிக்குமார் மயங்கி விழுந்தார். பின்னர், கவிதாவை சுப்பிரமணி, சத்திய நாராயணா ஆகிய 2பேரும் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஹரிகுமார் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை சத்தியநாராயணா ஆட்டோவில் ஏற்றி கேவிகே சாமி நகர்  பகுதியில் உள்ள மயானத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


New Shape Tailors

CSC Computer Education

Joseph Marketing




Thoothukudi Business Directory