» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாரத மக்கள் மருந்தகம் திறப்பு விழா: தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை

திங்கள் 25, ஜூன் 2018 4:57:53 PM (IST)தூத்துக்குடியில் மத்திய அரசின் மருந்துகள் துறை, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தின் ஆதரவோடு எம்பவர் சமூக சேவை அமைப்பின் பாரத மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு எம்பவர் சமூக சேவை அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தலைமை வகித்தார். மருந்தகத்தை வ.உ.சி. துறைமுக கழக தலைவர் ரிங்கேஷ் ராய் திறந்து வைத்தார். வ.உ.சி. துறைமுக கழக துணைத் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். தலைமை மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் (ஸ்டேட்டிக்), துணை தலைமை மருத்துவ அலுவலர் ஜோசப் சுந்தர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் மீராசங்கர், எம்பவர் பொருளாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை நன்றி கூறினார்.

இந்த மருந்தகங்கள் குறித்து எம்பவர் செயல் இயக்குநர் ஆ.சங்கர் கூறியதாவது : ஏழை மக்களும் மலிவு விலையில் தரமான மருந்துகளை வாங்க வேண்டும். மருந்துகள் வாங்க இயலாமல் ஏழைகள் உயிரிழக்கக் கூடாது. எனவே தான் நாடு முழுவதும் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்த்ரா திட்டத்தின் மூலம் மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இது வரை இந்தியா முழுவதும் சுமார் 3663 மருந்தகங்களும், தமிழ்நாட்டில் சுமார் 334 மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன. 

நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்று நோய், இரைப்பை பிரச்சினை, வைட்டமின்கள், ஆண்டிபயாட்டிக்ஸ் போன்றவற்றிற்கான 600க்கும் அதிகமான தரமான மருந்துகள் மிகக் குறைவான விலையில் இங்கு கிடைக்கும். இந்த மக்கள் மருந்தகம் தூத்துக்குடி பீச் ரோட்டில் சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வ.உ.சி.துறைமுக கழகத்தின் பழைய துறைமுக வளாகத்தில் செயல்படுகிறது. இதன் தொலைபேசி எண்கள் 0461 – 2300599, 8300111599 ஆகும். பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எம்பவர் அமைப்பானது கடந்த 27 ஆண்டுகளாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பணி செய்து வரும் சமூக சேவை அமைப்பாகும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமூக ஒருங்கிணைப்பு, பெண்களுக்கான மறுவாழ்வு இல்லம், சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் கல்வி பணி, நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு,மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்ற பல்வேறு தளங்களில் பணி செய்து வருகின்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் தீபக், அசரா ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingcrescentopticalsNew Shape TailorsThoothukudi Business Directory