» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒரு நபர் ஆணையம் விசாரணைக்கு தடையில்லை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!!

வெள்ளி 22, ஜூன் 2018 3:28:48 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகத் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையமும், மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையை நடத்தியது. இதைதொடர்ந்து, துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி அருணா ஜெகதீசன் தூத்துக்குடியில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், ஒரு நபர் விசாரணை ஆணையத்தை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் ஜூன் 22ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், சட்ட ஒழுங்கு பிரச்சனையால் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை ஆணையம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்ன என்பது குறித்துதான் விசாரிக்க வேண்டும். அரசே முன்கூட்டியே முடிவு செய்து விசாரணை ஆணையத்தை நியமிக்கக் கூடாது. இது இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே விசாரணை ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(ஜூன் 22) விசாரணைக்கு வந்த போது, தனி நபர் விசாரணை ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முறையான விதிமுறைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வரும் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


CSC Computer Education

Joseph Marketing

Nalam Pasumaiyagam

New Shape Tailors


Anbu Communications




Thoothukudi Business Directory