» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை : துாத்துக்குடியில் பரபரப்பு

புதன் 13, ஜூன் 2018 8:31:32 PM (IST)

பெரிய விசைப்படகு மீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி துாத்துக்குடியிலுள்ள மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடியில் சிறிய மற்றும் பெரிய விசைப்படகு மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 8 மாதங்களாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி மீனவர்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெரிய விசைப்படகு மீனவர் களை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்,அரசின் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி இன்று மாலை துாத்துக்குடியிலுள்ள மீன் வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை நுாற்றுகணக்கான மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.இருப்பினும் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.துாத்துக்குடி சார்ஆட்சியர் பிரசாத்,டவுன் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Nalam Pasumaiyagam





New Shape Tailors

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications



Thoothukudi Business Directory