» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியிலுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் : பாஜக மகளிர் செயற்குழு தீர்மானம்

புதன் 13, ஜூன் 2018 8:23:32 PM (IST)


துாத்துக்குடியிலுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பாஜக மகளிர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துாத்துக்குடியில் பாஜக மகளிரணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மகளிர்அணி தலைவிலதாஹரிதலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்டதலைவர் பாலாஜி , கோட்ட அமைப்புசெயலாலர் ராஜா,மாநிலமகளிர்அணிபொறுப்பாளர் உமாரதி அவர்களும் மாநிலபொதுச்செயலாலர் கனிஅமுதா  மாநிலதுணைத்தலைவர் டாக்டர் தீபா,மாவட்டபொதுச்செயலாலர் நெல்லையம்மாள்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழுதடைந்துள்ள நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டும். திருச்செந்துாரில் உள்ள பிரதான சாலையான பயணியர் சாலை யிலுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.இதன் அருகில் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சொந்தமான கருணை இல்லம் விடுதி,நீதிமன்ற வளாகம்,அஞ்சலகம் ஆகியவை உள்ளது.எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட மதுபானக்கடைகளை அகற்ற துாத்துக்குடி ஆட்சியர் உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாவட்டபொதுச்செயலாலர் கோமதி நன்றியுரை ஆற்றினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Joseph Marketing




crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory