» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பசுமை பூங்காவாக விரைவில் மாறும் பக்கிள்ஓடை

புதன் 13, ஜூன் 2018 2:30:06 PM (IST)

உயர் தொழில் நுட்பத்துடன் உன்னத வசதிகளுடன் பக்கிள் ஓடை பசுமை பூங்காவாக மாறுகிறது.

இது குறித்து துாத்துக்குடி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடையினால்  சுகாதாரக்கேடு ஏற்படாத வண்ணம் நவீன மயமாக்க உயர் தொழில் நுட்பத்துடன்,  ஓடையின்; இருமருங்கிலும் பகுதிகளை சீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணியானது தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளபபடும். இதன்படி, பக்கிள் ஓடையினையொட்டிய, இருபுறமும் மின்விளக்குகள், நடைபாதை, ஓடுதளம், மரங்கள், வண்ண பூஞ்செடிகள் மற்றும் ஆங்காங்கே இருக்கை வசதிகளுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பக்கிள் ஓடை வழியாக செல்லும் கழிவுநீரை சுத்தப்படுத்தி கடலில் கலக்கும் வகையில் பக்கிள் ஓடையின் கடைசி பகுதியான திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரத்தில் இரண்டு நுண் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு மேற்படி பணிகளுக்கு ரூ.33.00 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.    மேலும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நிறைவெற்றப்படவுள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளின் பிரதான பணியான 28 எம்எல்டி கொள்ளளவு  கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய மானது ரூ.36.89 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான தருவைக்குளம் உரக்கிடங்கில் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சியின் கழிவுநீரானது சுற்றுச்சூழல் மாசுபடா வண்ணம் நவீன தொழில் நுட்ப முறையில் சுத்திகரிப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. என மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals







Thoothukudi Business Directory