» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 11 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு

புதன் 13, ஜூன் 2018 11:00:16 AM (IST)

தூத்துக்குடியில் கலவரத்தையொட்டி அடைக்கப்பட்டிருந்த 11 டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இயல்பு நிலை திரும்பியதயடுத்து சில தினங்களுக்கு முன்னர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில், கலவரத்தையொட்டி தூத்துக்குடி நகர் மற்றும் தாலூகா பகுதிகளில் 11 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த கடைகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுதது இன்று மதியம் 12 மணி முதல் மதுபான விற்பனை துவங்குகிறது. 

இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் கடைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, தூத்துக்குடி தாலுகாவில் உள்ள கடைகளில் வேர்ஹவுஸ்-இல் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்ட கடைகள்: 9966, 9953, 9938, 9958, 9932, 10132 ஆகிய கடைகளும், கிடங்கில் உள்ள அறையில் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்ட கடைகள்: 9949, 9959, 9972, 9973, 10084 ஆகிய 11 கடைகளின் அனைத்து பணியாளர்களும் நாளை காலை (13.06.2018-புதன்கிழமை) 9.00மணியளவில் அலுவலகத்திற்கு உரிய ஏற்பாடுகளுடன் வந்து அவரவர் கடைகளுக்குரிய மதுபானங்களை எடுத்து சென்று 12.00 மணிக்கு கடையை திறந்து விற்பனை மேற்கொள்ளப்பட வேண்டியது. 

கிடங்கில் மதுபானங்களை ஒப்படைக்கப்பட்ட மீதம் உள்ள கடைகளுக்கு அலுவலகத்திலிருந்து மதுபானங்கள் இன்வாய்ஸ் பில் மூலம் நாளை அனுப்பபடும். டிரான்ஸ்போர்ட் காரர்களிடம் வரும் நேரத்தை கேட்டுக்கொண்டு, அவர்களும் கடைகளில் மதுபானங்களை இறக்கி வைத்து விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. விற்பனையின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் உடன் மாவட்ட மேலாளரிடம் உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும். 


மக்கள் கருத்து

ThalavaimuthuJun 13, 2018 - 03:58:52 PM | Posted IP 162.1*****

இன்று முதல் பல குடும்பம் நிம்மதி தொலைத்தது

மனிதன்Jun 13, 2018 - 01:56:15 PM | Posted IP 162.1*****

மிக்க நன்றி .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing






Thoothukudi Business Directory