» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நள்ளிரவில் காருக்கு தீவைப்பு? போலீஸ் விசாரணை!!

புதன் 13, ஜூன் 2018 10:23:33 AM (IST)



தூத்துக்குடியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி, டூவிபுரம் பண்டுகரை சாலையோரத்தில் நிறுத்தியிருந்த போர்டு ஐகான் கார் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 4வது கேட் அருகே ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அந்த கார் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் கார் கன்சல்டிங் நிறுவனத்திற்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. கடந்த பல மாதங்களாக அந்த கார் சாலையோரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிந்தது. தீயில் கார் முழுமையாக கருகியது. காருக்கு மர்மநபர்கள் யாரேனும் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனரா? அல்லது அப்பகுதியில் குப்பைகளை எரித்ததில் இருந்து பரவியதீயால் கார் தீப்பற்றி எரிந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் அமைதி சிறிது சிறிதாக திரும்பி வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam




New Shape Tailors

Joseph Marketing


CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory