» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா குறித்து பேஸ்புக்கில் அவதூறு : சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

செவ்வாய் 12, ஜூன் 2018 11:33:36 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் அமைந்துள்ள பனிமய மாதா ஆலயம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆக.5ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். 

இந்நிலையில், சுரேஷ் என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் பனிமய மாதா குறித்து அவதூறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளதாக தென்பாகம் காவல் நிலையத்தில் பரதர் நல சங்கத் தலைவர் ஜான்சன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals



Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors



Thoothukudi Business Directory