» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத்தகராறு... தீயில் கருகி தம்பதியர் உயிரிழப்பு: தூத்துக்குடி அருகே பரிதாபம்..!

செவ்வாய் 12, ஜூன் 2018 11:01:36 AM (IST)

தூத்துக்குடி அருகே குடும்பத்தகராறில் கணவன் தீக்குளித்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் தீயில் கருகி உயிரிழந்தார். 
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகே திருவேங்கடபுரம் நடுத்தெருவைச் சேர்நதவர் இசக்கி மகன் சங்கரன்(38). இவர் தூத்துக்குடியில் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி ரத்தினம்(32). இவர்களுக்கு அதிசயா(9), சுபஸ்ரீ(6) என இரண்டு மகள்கள் உள்ளனர். தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த சங்கரன், ரத்தினத்தை திட்டியுள்ளார். இது அவர்களிடையே தகராறு ஏற்ப்பட்டு, கைகலப்பானது. 

இதனால் மனமுடைந்த சங்கரன் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரை அவரது மனைவி ரத்தினம் காப்பாற்ற முற்பட்டார். அப்போது அவர் மீது தீப்பற்றியது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கப்பக்கத்தில் இருந்தவர்கள் தம்பதியினரை மீட்டு 108 மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று காலை அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து முறப்பநாடு சப் இன்ஸ்பெக்டர்கள்  சோனியா, அஜ்மல்செனிபு விசாரனை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





crescentopticals

New Shape Tailors

Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory